< Back
சினிமா செய்திகள்
படமாகும் ராமாயணம்: சீதையாக சாய் பல்லவி...!
சினிமா செய்திகள்

படமாகும் ராமாயணம்: சீதையாக சாய் பல்லவி...!

தினத்தந்தி
|
28 Aug 2023 12:59 PM IST

அலியாபட்டுக்கு பதிலாக சீதை வேடத்தில் நடிக்க சாய்பல்லவியை படக்குழுவினர் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கில் ராமராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர்.

ஆதிபுருஷ் என்ற பெயரில் தயாரான ராமாயண படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் ஆகியோர் நடித்து இருந்தனர்.

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்னொரு ராமாயண படமும் தயாராக உள்ளது. பாகுபலி கிராபிக்ஸ் காட்சிகளை மிஞ்சும் வகையில் அதிக பொருட் செலவில் 3 பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். நிதிஷ் திவாரி டைரக்டு செய்கிறார். அல்லு அரவிந்த், மது மந்தெனா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக அலியாபட்டும் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினைகளால் படத்தில் இருந்து அலியாபட் விலகி விட்டார். இதையடுத்து அலியாபட்டுக்கு பதிலாக சீதை வேடத்தில் நடிக்க சாய்பல்லவியை படக்குழுவினர் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய்பல்லவியும் ராமாயண படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்