< Back
சினிமா செய்திகள்
ராமாயண கதை... எதிர்ப்பால் தள்ளிப்போகும் ஆதி புருஷ்
சினிமா செய்திகள்

ராமாயண கதை... எதிர்ப்பால் தள்ளிப்போகும் 'ஆதி புருஷ்'

தினத்தந்தி
|
8 Nov 2022 8:32 AM IST

ராமாயண கதையை கொண்ட ”ஆதிபுருஷ் ” படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பை தொடர்ந்து ரிலீஸ் தேதி ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் படம் தயாராகி உள்ளது. இதில் ராமராக பிரபாஸ் சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம்ராவத் இயக்கி உள்ளார். இந்த படத்தை ஜனவரி மாதம் திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பொம்மை படம் போன்று இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியது. ராவணன் தோற்றத்தை தவறாக சித்தரித்து இருப்பதாக பா.ஜ.க. கண்டித்தது. புராண கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்து மத உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாகவும், எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். எதிர்ப்பை தொடர்ந்து ஆதிபுருஷ் ரிலீஸ் ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு முழுமையான காட்சி அனுபவத்தை அளிக்க மேலும் சில பணிகள் இருப்பதால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். சர்ச்சை காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் மாற்றி அமைக்க படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்