< Back
சினிமா செய்திகள்
ராம் பொதினேனி நடித்துள்ள டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டீசர் வெளியானது
சினிமா செய்திகள்

ராம் பொதினேனி நடித்துள்ள 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது

தினத்தந்தி
|
16 May 2024 12:31 PM IST

இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரித்துள்ள 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகிறது.

சென்னை,

'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் சீக்குவலான 'டபுள் ஐஸ்மார்ட் ' படத்திற்காக நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி ஹீரோவாகவும், சஞ்சய் தத் வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகிறது. இதற்கு இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், நடிகர் ராமின் பிறந்தநாளான நேற்று (மே 15) 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டீசரில்,

"ஐதராபாத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தன்னை சுற்றியுள்ள சில விஞ்ஞானிகளுடன் இருக்கும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை விவரிக்க சில மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும் வாய்ஸ் ஓவருடன் டீசர் தொடங்குகிறது. பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் உஸ்தாத் ஐஸ்மார்ட் ஷங்கர் என்ற டபுள் ஐஸ்மார்ட்டாக ராம் மீண்டும் வந்துள்ளார். இதில் காவ்யா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகை சஞ்சய் தத் பவர்புல்லான பிக் புல்லாக மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தைப் போலவே, 'டபுள் ஐஸ்மார்ட்'டிலும் ஆன்மிக தொடுதலுடன் அதிரடியான ஆக்ஷன் கிளைமாக்ஸ் காட்சி உள்ளது. பிரம்மாண்டமான சிவலிங்கமும், கிளைமாக்ஸ் சண்டை நடக்கும் பெரும் கூட்டமும் பார்வையாளர்களை நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கிறது."

மேலும், டீசரில் ஒற்றை வரியில் இடம்பெற்றுள்ள வசனங்களும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலியின் காட்சியமைப்புகள் அருமையாக வந்துள்ளது. இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரித்துள்ள 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மேலும், படம் குறித்தான அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்