'புஷ்பா 2' ரிலீஸ் ஒத்திவைப்பு: ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 'டபுள் இஸ்மார்ட்'
|‘புஷ்பா 2’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை,
பிரபல நடிகர் ராம் பொத்தினேனி. இவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'இஸ்மார்ட் ஷங்கர்'. பூரி ஜெகன்நாத் இயக்கி, தயாரித்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரூ.100 கோடி வசூலித்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 'டபுள் இஸ்மார்ட்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பொத்தினேனி, பூரி ஜெகன்நாத் மீண்டும் இணையும் இப்படத்தை சார்மி கவுர் மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கின்றனர்.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில், ஆகஸ்ட் 15ம் தேதி அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஏற்பட்ட தாமத்தால் இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த தேதியில் 'டபுஸ் இஸ்மார்ட்' படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 15-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.