எல்லை மீறும் டைரக்டர்...! விளம்பரத்திற்காக நடிகையின் காலில் உட்கார்ந்து பின்னர் முத்தம் வேறு...!
|லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படம் இந்த டிசம்பர் 9ம் தேதியாவது வெளியாகுமா? இல்லை மீண்டும் தள்ளிப் போகுமா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
சென்னை
ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் ராம் கோபால் வர்மா சூர்யாவின் ரத்த சரித்திரா படத்தையும் இயக்கி இருந்தார். ஆனால், சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என ஆபாச பட இயக்குநராக மாறி விட்டார். அவரது இயக்கத்தில் விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக காத்திருக்கிறது.
தற்போது சர்ச்சைக்கு பேர்போன டைரக்டர் ராம் கோபால் நடிகை ஒருவரின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
ஆர்ஆர்ஆர் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்கிறேன் என புரமோஷனை ஆரம்பித்த அவரது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படம் இந்த டிசம்பர் 9ம் தேதியாவது வெளியாகுமா? இல்லை மீண்டும் தள்ளிப் போகுமா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ராம் கோபால் வர்மா தான் நடிக்கவிருக்கும் டேஞ்சரஸ் படத்தை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் விளம்பரப்படுத்தி வருகிறார். படத்தின் நடிகையுடன் ராம் கோபால் வர்மா வினோதமான செயல்களைச் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன.
அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி நடிப்பில் படு மோசமாக உருவாகி உள்ள லெஸ்பியன் திரைப்படமான டேஞ்சரஸ் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், கடைசியாக அந்த படத்தை எந்த தியேட்டருமே வாங்க முன் வரவில்லை. ஓடிடியில் வெளியிடுவார் என எதிர்பார்த்தால், வெளியிட்டால் தியேட்டரில் தான் என கங்கணம் கட்டிக் கொண்டு டிசம்பர் 9ம் தேதி கிடைத்த சில தியேட்டர்களில் படத்தை வெளியிட காத்திருக்கிறார்.
டேஞ்சரஸ் பட நடிகைகளான நைனா கங்குலி மற்றும் அப்சரா ராணியுடன் ஏகப்பட்ட நைட் பார்ட்டிகளை முடித்த நிலையில், பிக் பாஸ் தெலுங்கு பிரபலமான ஆஷு ரெட்டியின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் போட்டோவை வெளியிட்ட ராம் கோபால் வர்மா,
இவரது உடலில் ஆபத்தான குறியீடு எங்கே என்பதை கேட்பது போல கேமராவைப் பார்த்து சைக்கோ லுக்கில் போஸ் கொடுப்பது. இந்த ஆபாசமான செய்கை ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
தனது படத்தை விளம்பரப்படுத்த ராமு இப்படி ஒரு செயலைச் செய்ததால் அந்த இயக்குனரை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வீடியோவில், டேஞ்சரஸ் படத்தின் நடிகை ஆஷு ரெட்டிkku ராம் கோபால் வர்மா கால் மசாஜ் செய்கிறார்.
ஆஷு ரெட்டியின் டேஞ்சரஸ் மார்க்கா? என்ன சொல்றாரு ராம் கோபால் வர்மா என திகைத்துப் போய் அவரது அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், புகை பிடித்துக் கொண்டு, கால் மேல் கால் போட்டு ஆஷு நாற்காலியில் அமர்ந்திருக்க, கீழே அமர்ந்து கொண்டு அவருடன் பேட்டி எடுத்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.
இதில் என்ன வினோதம் என்று நினைப்பீர்கள், இப்போது சொல்லுங்கள் நடிகையின் காலை கவ்வி முத்தமிடுகிறார்.
அபாயகரமான ஆஷு ரெட்டியுடன் முழு வீடியோ இதோ…உங்கள் சொந்த ரிஸ்கில் பாருங்கள்
இதனை பார்த்த ஒருவர் ராமு சாரை இப்படி பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்தவர். பெரிய நடிகர்கள் அனைவரும் அவருடன் நடிக்க விரும்பினர்.