< Back
சினிமா செய்திகள்
அமீர் கான் படத்துடன் மோதும் ராம் சரணின் கேம் சேஞ்சர்
சினிமா செய்திகள்

அமீர் கான் படத்துடன் மோதும் ராம் சரணின் 'கேம் சேஞ்சர்'

தினத்தந்தி
|
22 July 2024 6:41 PM IST

அமீர் கான் நடித்துள்ள 'சிதாரே ஜமீன் பர்' படமும் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படமும் வருகிற டிசம்பர் 25-ம் தேதியன்று வெளியாக உள்ளது.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவாகும். ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில் தனுஷின் 'ராயன்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தில் ராஜு கலந்து கொண்ட போது 'கேம் சேஞ்சர்' படத்திற்கான ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார். அதன்படி, வருகிற டிசம்பர் 25-ம் தேதி (கிறிஸ்துமஸ்) அன்று வெளியிடப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.

அதே தேதியில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்துள்ள 'சிதாரே ஜமீன் பர்' என்ற படமும் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து வருண் தவான் நடித்துள்ள 'பேபி ஜான்' படமும் அதே தேதியில் வெளியாக உள்ளது. ஒரே தேதியில் இந்த படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மேலும் செய்திகள்