ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' டப்பிங் பணிகள் தொடக்கம்
|'கேம் சேஞ்சர்' படத்தின் டப்பிங் பணிகளை படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கி உள்ளனர்.
ஐதராபாத்,
ஆர்.ஆர்.ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவாகும். ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்தபடத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். மேலும், ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஐதராபாத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கி உள்ளனர். இது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.