தாய்லாந்தில் மனைவியுடன் ஈஸ்டர் கொண்டாடிய ராம்சரண்
|நடிகர் ராம் சரண் நேற்று ஈஸ்டர் பண்டிகையை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார்.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த சூழலில் நடிகர் ராம் சரண், மனைவி உபாசனா காமினேனி மற்றும் நண்பர்களுடன் நேற்று ஈஸ்டர் பண்டிகையை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார். இது குறித்தான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
முன்னதாக நடிகர் ராம் சரண் தனது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழு மலையான் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அன்றைய தினமே அவர் நடித்து வரும் 'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.