< Back
சினிமா செய்திகள்
16வது படத்துக்காக உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!
சினிமா செய்திகள்

16வது படத்துக்காக உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தினத்தந்தி
|
25 Sept 2024 4:46 AM IST

நடிகர் ராம் சரண் தனது 16வது படத்துக்காக உடல் எடையைக் கூட்டி வருகிறார்.

தெலுங்கு நடிகர்களில் மிகவும் பிரபல நடிகராக ராம் சரண் இருக்கிறார். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ராம் சரண். இதில், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கியாரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளார்கள். விரைவில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

கேம் சேஞ்சர் படத்துக்குப் பிறகு 16ஆவது படமாக உருவாகும் படத்துக்காக சுமார் 100 கிலோ எடையைக் கொண்ட கதாபாத்திரமாக ராம் சரண் மாறவிருப்பதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.சமீபத்தில் உடற்பயிற்சி நிபுணர் ஷிவோகம் உடன் இணைந்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார். ஆர்சி 16 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை உப்பெனா படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இயக்குகிறார்.



மேலும் செய்திகள்