ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியீடு
|‘கேம் சேஞ்சர்’ படம் அடுத்தாண்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருவதாக தயாரிப்பு நிறுவனம் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இசையமைப்பாளர் தமன் `கேம் சேஞ்சர்' படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். கேம் சேஞ்சர் படத்தின் 'ரா மச்சா மச்சா' பாடல் வெளியாகி வைரலானது.
இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார்.படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் மற்றும் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் - 2 தோல்விக்குப் பின் கேம் சேஞ்சர் மூலம் ஷங்கர் மீண்டு வருவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. . முன்னதாக, இப்படத்தை டிசம்பர் 20ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருவதாகத் தயாரிப்பு நிறுவனம் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது.
'கேம் சேஞ்சர்' படத்தை தொடர்ந்து ராம் சரண் தனது 16-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் புச்சி பாபு இயக்குகிறார்.