< Back
சினிமா செய்திகள்
ரூ.1300 கோடி சொத்துக்கு அதிபதி நடிகர் ராம் சரண் ...! சினிமாவை தாண்டி செய்யும் தொழில்...!
சினிமா செய்திகள்

ரூ.1300 கோடி சொத்துக்கு அதிபதி நடிகர் ராம் சரண் ...! சினிமாவை தாண்டி செய்யும் தொழில்...!

தினத்தந்தி
|
27 March 2023 11:42 AM IST

நடிகர் ராம்சரணுக்கு கார்கள் மீது அதீத பிரியம் உண்டு. இதன் காரணமாக இவர் ஏராளமான கார்களையும் வாங்கி குவித்து வைத்துள்ளார்.

ஐதராபாத்

38 வயதாகும் நடிகர் ராம்சரண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரபலங்கள் பலரும் ராம்சரணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ராம்சரணின் சொத்துமதிப்பு குறித்தும் அவரது கார் கலெக்ஷன்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் ராம்சரண் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் என்பதனால் அவரது சொத்துக்கள் அனைத்தும் இவருக்கே சேரும். சமீபத்திய தகவல்படி 175 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய நிகர மதிப்பை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது, இது இந்திய ரூபாயில் தோராயமாக ரூ. 1370 கோடிக்கு சமம். அவரது வருமானத்தில் பெரும்பகுதி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைப்படங்களில் இருந்து வருகிறது.

தனது தந்தை சிரஞ்சீவி, தாய் சுரேகா மற்றும் மனைவி உபாஸ்னாவுடன் ஐதராபாத்தில் உள்ள ஒரு பங்களாவில் வசிக்கிறார்.ஜூப்லி ஹில்ஸின் ஆடம்பரமான காலனிகளில் அமைந்துள்ள இந்த வீடு, 25,000 சதுர அடியில் ரூ. 40 கோடி மதிப்புடையது என்றும், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், கோயில், கிங் சைஸ் படுக்கையறைகள் மற்றும் பல ஆடம்பர வசதிகளைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி நடிகர் ராம்சரணுக்கு கார்கள் மீது அதீத பிரியம் உண்டு. இதன் காரணமாக இவர் ஏராளமான கார்களையும் வாங்கி குவித்து வைத்துள்ளார். இவர் ஆடி மார்ட்டின் வி8 வான்டேஜ், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், ரேஞ்ச் ரோவர், ஆஸ்டன் மார்ட்டின், ஃபெராரி போர்டோபினோ போன்ற பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். குறிப்பாக அவர் வைத்திருக்கும் மெர்சிடிஸ் மேபேஜ் GLS 600 காரின் விலை மட்டும் சுமார் 4 கோடி இருக்குமாம்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்த ராம்சரன் ரூ. 40 கோடிகளை ஊதியமாக பெற்று உள்ளதாக கூறப்படுகிறத

நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருக்கிறார் ராம் சரண். அவர் தனது குடும்பத்தின் பெயரில் கொனிடேலா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார், மேலும் தனது தந்தை சிரஞ்சீவியின் படங்களை வங்கி வெளியீடு செய்து வருகிறார் அவர் சிரஞ்சீவியின் 150வது படமான கைதி நம்பர் 150ஐ தயாரித்தார், இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.164 கோடிக்கு மேல் சம்பாதித்தது. அதன்பிறகு, தயாரிப்பு நிறுவனம் சைரா நரசிம்ம ரெட்டியுடன் பெரும் வசூலைப் பெற்றது, இது ரூ 270-300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது மற்றும் அமிதாப் பச்சன், நயன்தாரா மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

நடிகர் ராம்சரண் படங்கள் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மூலமும் பலகோடி சம்பாதித்து வருகிறார். இவர் மொத்தம் 34 பிராண்டுகளின் விளம்பர தூதராக இருந்து வருகிறார். தோராயமாக ஒரு விளம்பரத்திற்கு இவர் ரூ.1.8 கோடி சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் இவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதுதவிர டுரூஜெட் என்கிற விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறாராம் ராம்சரண்.

இவர் உபாசனா என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவரும் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் ஆவார். கடந்த 11 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த தம்பதி தற்போது தங்களது முதல் குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறது. தற்போது உபாசனா கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராம் சரண் மிகவும் நாகரீகமான நடிகர்களில் ஒருவர். அவர் குஸ்ஸி, மேபேக், லூயிஸ் உய்ட்டன், ஹெர்ம்ஸ் போன்ற பிராண்டட் ஆடைகளை அணிவார். அவர் சர்வதேச அளவில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளையும் அணிகிறார். லட்சக்கணக்கான மதிப்புள்ள உயர்தர டிசைனர் பொருட்களை உபாசனா வைத்திருக்கிறார்.

ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு முன்னர் வரை ரூ.35 முதல் 40 கோடி வரை வாங்கி வந்த ராம்சரண், தற்போது தன் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டார். ராம்சரண் நடிப்பில் தற்போது கேம் சேஞ்சர் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் பெயர் கேம் சேஞ்சர். ராம் சரண் பிறந்தநாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசியல் திரில்லர் படமான இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். கியாரா அத்வானி கதாநாயகி. அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கதை வசனம் கார்த்திக் சுப்பராஜ், இணை தயாரிப்பாளர் ஹர்ஷித், ஒளிப்பதிவு எஸ் திருநாவுக்கரசு, இசை தமன்


மேலும் செய்திகள்