< Back
சினிமா செய்திகள்
ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிவு
சினிமா செய்திகள்

ராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிவு

தினத்தந்தி
|
16 July 2024 9:53 PM IST

'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ராம்சரண் நடிக்கும் காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விசாகப்பட்டினம்,

ஆர்.ஆர்.ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவாகும். ஷங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.


கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.


இந்தநிலையில், இப்படத்திற்கான சூட்டிங் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே கடற்கரையில் நடைபெற்றது. ராம் சரண் பிற நடிகர்களுடன் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட காட்சி எக்ஸ் தள பக்கத்தில் கசிந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் "நாங்கள் முழுப் படத்தையும் ஆன்லைன் பார்ப்பது போல் தெரிகிறது, நீங்கள் நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால், முழுப்படமும் கசிந்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் இன்னும் எத்தனை காட்சிகள் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். இந்தநிலையில் ராம்சரணின் தீவிர ரசிகர்கள் படத்தின் காட்சிகள் கசிந்துள்ளதால் கவலையடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்