சினிமா செய்திகள்
உறைய வைக்கும் குளிரில் உள்ளாடையுடன் ரகுல் பிரீத் சிங் கவர்ச்சி குளியல்...! - வைரலாகும் வீடியோ
சினிமா செய்திகள்

உறைய வைக்கும் குளிரில் உள்ளாடையுடன் ரகுல் பிரீத் சிங் கவர்ச்சி குளியல்...! - வைரலாகும் வீடியோ

தினத்தந்தி
|
8 May 2023 12:07 PM IST

ரகுல் பிரீத் சிங் அடுத்ததாக மேரி பட்னி கா ரீமேக்கில் அர்ஜுன் கபூர் மற்றும் பூமி பட்னேகர் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

சென்னை

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ தான் தற்போது செம்ம டிரெண்டாகி வருகிறது. அதில் சுற்றிலும் வெண்பனியால் சூழப்பட்ட குளிர் பிரதேசத்தில் பிகினி உடை அணிந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் குளிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பனிக்குளத்தில் அவர் மூழ்கி ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.

மைனஸ் 15 டிகிரி குளிரில் அவர் இப்படி குளித்ததற்கு காரணம், அது ஒருவகையான சிகிச்சையாம். கிரயோதெரபி எனப்படும் அந்த சிகிச்சையை மேற்கொள்ளவே அவர் இப்படி உறைய வைக்கும் குளிரில் குளித்துள்ளாராம். இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு சிகிச்சை முறையா என ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில் வெளிர் நீல பூப்போட்ட பிகினியை அணிந்தபடி மரத்தாலான வீட்டில் இருந்து ராகு பிரீத் சிங் வெளியே வருகிறார். பனிக்குள குளியலுக்குப் பிறகு வெளியேறும் ரகுல் குளிரில் வசீகரமாக உள்ளார்.

பனி மற்றும் பனியால் சூழப்பட்டிருக்கும்இயற்கையான நீச்சல் குளத்தில் அவர் குளிக்கிறார். அவர் மீண்டும் மர வீட்டை நோக்கி செல்லும் போது, நடிகர் கேமராவைப் பார்த்து சிரித்துக் கொண்டே செல்கிறார்.

ரகுல் பிரீத் சிங் அடுத்ததாக மேரி பட்னி கா ரீமேக்கில் அர்ஜுன் கபூர் மற்றும் பூமி பட்னேகர் ஆகியோருடன் நடித்து வருகிறார்.



மேலும் செய்திகள்