கபில்தேவ் மற்றும் சத்குருவுடன் கோல்ப் விளையாடும் நடிகை ரகுல் பிரீத் சிங்!
|அவர் வெளியிட்ட வீடியோவில், நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றும் கபில் தேவ், ஜக்கி வாசுதேவ் இணைந்து கோல்ப் விளையாடுவதைக் காண முடிந்தது.
வாஷிங்டன்,
நடிகை ரகுல் பிரீத் சிங், மூத்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் 'கோல்ப்' விளையாடும் படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது வாஷிங்டன் டிசியில் இருக்கும் ரகுல், அங்கு கோல்ப் விளையாட்டை ரசித்து கொண்டிருக்கும் படங்களையும் பகிர்ந்தார். அவர் வெளியிட்ட வீடியோவில், நடிகை ரகுல் பிரீத் சிங் மற்றும் கபில் தேவ், ஜக்கி வாசுதேவ் இணைந்து கோல்ப் விளையாடுவதைக் காண முடிந்தது. கபில்தேவ் மற்றும் சத்குருவுடன், ரகுல் பிரீத் சிங் போஸ் கொடுப்பது மற்றும் வேடிக்கையாக உரையாடுவதும் காணப்பட்டது.
31 வயதான நடிகை ரகுல் பிரீத் சிங், கருப்பு நிற ஆடை அணிந்து கோல்ப் விளையாடுகிறார். கருப்பு நிற ஷார்ட்ஸ் மற்றும் டீ-ஷர்ட் அணிந்திருந்தார் ரகுல்.
சத்குரு ஒரு மஞ்சள் நிற டி-ஷர்ட்டில் காணப்பட்டார், அதில் 'மண்ணை காப்போம்' என்ற வாசகம் இருந்தது.கபில்தேவ் ஒரு கருப்பு சட்டை மற்றும் காக்கி பேன்ட் அணிந்திருந்தார். மூவரும் கண்ணாடி மற்றும் தொப்பி அணிந்து கொண்டு படு ஸ்டைலாக போஸ் கொடுத்தனர்.
இதற்கிடையில், நடிகை ரகுல் பிரீத் சிங், சமீபத்தில் அஜய் தேவ்கன் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த 'ரன்வே 34' படத்தில் காணப்பட்டார். அவர் அடுத்து 'டாக்டர் ஜி' படத்தில் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.