< Back
சினிமா செய்திகள்
ராக்கி சாவந்த்  - புகைப்படம் வைரல்,Rakhi Sawant Rushed to Hospital
சினிமா செய்திகள்

சுயநினைவின்றி கிடக்கும் ராக்கி சாவந்த் - புகைப்படம் வைரல்

தினத்தந்தி
|
16 May 2024 10:40 AM IST

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை,

பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் தமிழில் 'என் சகியே, முத்திரை' போன்ற படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். 2021-ல் நடந்த பிக் பாஸ் 15 சீசனில் கணவர் ரித்தேஷை அறிமுகப்படுத்தினார். ஆனால், இறுதிப் போட்டிக்குப் பிறகு இருவரும் பிரிந்தனர்.பின்னர் ஆதில்கான் துரானி என்பவரை மணந்தார். இந்த திருமணமும் சிக்கலில் முடிந்தது. ஆதிலுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் ராக்கி சாவந்த் திடீரென்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதய நோய் ஏற்பட்டு இருப்பதாகவும், இதற்காக அவர் சிகிச்சை பெறுவதாகவும் கூறப்படுகிறது. ராக்கி சாவந்த் ஆஸ்பத்திரி படுக்கையில் சுயநினைவின்றி படுத்து இருப்பதுபோன்ற புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்