< Back
சினிமா செய்திகள்
திருமணமா இல்லை என மறுக்கும் காதலன்...! மனம் உடைந்த கவர்ச்சி நடிகை....!
சினிமா செய்திகள்

திருமணமா இல்லை என மறுக்கும் காதலன்...! மனம் உடைந்த கவர்ச்சி நடிகை....!

தினத்தந்தி
|
12 Jan 2023 1:22 PM IST

காதலனை திடீரென ரகசிய திருமணம் செய்ததாக ஆதாரங்களை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ஆனால் திருமணம் நடைபெறவில்லை என காதலன் மறுப்பு.

மும்பை

இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த். இவர் அரசியல், நடனம், மாடல் அழகி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல துறைகளில் முத்திரை பதித்தவர். தற்போது 44 வயதாகும் ராக்கி சாவந்த் கடந்த 2019-ம் ஆண்டு ரிதீஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2022-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

ரிதீஷ் சிங்கை விவாகரத்து செய்த ராக்கி சாவந்த், மைசூருவைச் சேர்ந்த ஆதில் என்பவருடன் பழகி வந்தார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும், மிகவும் எளிமையாக இவர்களது திருமணம் நடந்ததாகவும், தங்களது திருமணத்தை அவர்கள் பதிவு செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, அவர்களின் 'நிக்காஹ் (திருமண சான்றிதழ்) புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. சான்றிதழின்படி, ராக்கி மற்றும் ஆதிலின் தனிப்பட்ட நிக்காஹ் மே 29, 2022 அன்று நடந்தது. தற்போது அவர் தனது பெயரை 'ராக்கி சாவந்த் பாத்திமா' என்று மாற்றிக் கொண்டார்.

ஆனால் இதனை ஆதில் முற்றிலுமாக மறுத்து உள்ளார் காதலன் ஆதில். நான் ராக்கி சாவந்தை திருமணம் செய்து கொள்ளவில்லை அவர்களின் திருமணத்தை 'போலி' என்று கூறினார்.

இதுகுறித்து ராக்கி சாவந்த் கூறும் போது

அவருக்கு பைத்தியமா? திருமணத்திற்கான அனைத்து ஆதாரங்களையும் நான் கொடுத்துள்ளேன். அவர் மறுத்ததற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. நான் அவரை கண்மூடித்தனமாக நம்பி ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன். அவர் எங்கள் திருமண தகவல்களை வெளியிட வேண்டாம் என்று என்னிடம் கேட்டு கொண்டார்.

எங்கள் திருமணத்தை ஏன் மறைக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை, நான் இன்று காலை அவரிடம் பேசினேன். எங்கள் திருமணத்தை அறிவிக்க வேண்டிய நேரம் இது, அவர் பெற்றோருக்கு பயப்படுகிறாரா? அல்லது இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இதைச் செய்கிறாரா? ? என தெரியவில்லை எனக்கூறினார்.

மேலும் செய்திகள்