< Back
சினிமா செய்திகள்
ரஜினியின் ஜெயிலர் கதை கசிந்ததா?
சினிமா செய்திகள்

ரஜினியின் ஜெயிலர் கதை கசிந்ததா?

தினத்தந்தி
|
20 July 2023 7:06 AM IST

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர். நெல்சன் இயக்கி உள்ளார். படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஜெயிலர் கதை வலைத்தளத்தில் கசிந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. புறநகர் பகுதியில் இருக்கும் சிறைச்சாலையில் ரஜினிகாந்த் ஜெயிலராக இருக்கிறார். கொலை, கொள்ளை, கடத்தல் என்று நகரையே ஆட்டிப்படைக்கும் பயங்கர தாதாவை போலீசார் உயிரை பணயம் வைத்து கைது செய்து ரஜினி ஜெயிலராக இருக்கும் சிறைச்சாலைக்குள் அடைக்கின்றனர்.

அங்கிருந்து தப்பிக்க தாதா திட்டமிடுகிறான். அதற்கு வெளியே இருக்கும் அவனது கூட்டாளிகளான குட்டி தாதாக்கள் உதவி செய்கிறார்கள். இந்த சதித்திட்டம் ரஜினிக்கு தெரியவர பாதுகாப்பை பலப்படுத்தி தடுக்க முயற்சிக்கிறார். இதனால் அவருக்கு மிரட்டல்கள் வருகின்றன. ரஜினி வெளியே வரும்போதும் குட்டி தாதாக்களால் ஆபத்துகள் வருகிறது.

அதையெல்லாம் எதிர்கொண்டு சிறைக்குள் இருக்கும் தாதாவை தப்ப விடாமல் எப்படி தடுக்கிறார் என்பது கதை என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கதையை ரசிகர்கள் பலர் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். ஆனாலும் இதுதான் ஜெயிலர் படத்தின் கதையா? என்பது உறுதியாகவில்லை.

மேலும் செய்திகள்