< Back
சினிமா செய்திகள்
கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் ரஜினி மகள் சாமி தரிசனம்
சினிமா செய்திகள்

கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் ரஜினி மகள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
25 March 2024 11:31 AM IST

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா காரைக்காலுக்கு வருகை தந்தார்.

காரைக்கால்,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் காரைக்காலில் உள்ள ஸ்ரீ சவுந்தரவல்லி சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா காரைக்காலுக்கு வருகை தந்தார். பின்னர், அங்குள்ள ஸ்ரீ சவுந்தரவல்லி சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று சவுந்தர்யா சாமி தரிசனம் செய்தார்.

இக்கோவிலில் இல்லறம் மகிழ்வுற வேண்டி பிரார்த்திப்பது வழக்கம். அதற்காக, சவுந்தர்யா இங்கு வந்து வழிபட்டிருக்கலாம் என்றுக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்