< Back
சினிமா செய்திகள்
ரிலீஸ் ஆகும் முன்பே முன்பதிவில் மாஸ் காட்டும் ரஜினியின் வேட்டையன்
சினிமா செய்திகள்

ரிலீஸ் ஆகும் முன்பே முன்பதிவில் மாஸ் காட்டும் ரஜினியின் 'வேட்டையன்'

தினத்தந்தி
|
6 Oct 2024 5:29 PM IST

நடிகர் ரஜினியின் 'வேட்டையன்' திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், முன்பதிவு மாஸாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் உலா வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ளது.

வேட்டையன் படம் வெளியாக இருப்பதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வேட்டையன் படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கியது முதலே வேட்டையன் படத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

சென்னையின் பிரபல திரையரங்குகளில் இணையத்தில் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலே டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று முடிந்தது. மற்ற திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால், ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ரஜினிகாந்த் படம் என்றாலே பொதுவாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்பதாலும், ஜெய்பீம் படத்திற்கு பிறகு த.ஞானவேல் இயக்கியுள்ள படம் என்பதாலும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' 'ஹண்டர் வண்டார்' பாடல்கள் வைரலாகி வருகின்றன.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியான ரஜினிகாந்த் – என்கவுன்டரை எதிர்க்கும் உயரதிகாரி அமிதாப்பச்சன் இவர்களுக்கு இடையே தொடர் கொலைகளைச் செய்யும் கொலையாளியை கண்டுபிடிக்கும் ரஜினிகாந்த் என விறுவிறுப்பான திரைக்கதையுடன் வேட்டையன் படம் உருவாகியுள்ளது. பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் முதன்முறையாக தமிழில் அறிமுகமாகிறார்.

ரஜினியின் வேட்டையன் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் தற்போதுவரை வெளிநாடுகளில் 1.2 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்