< Back
சினிமா செய்திகள்
100 நாட்களை நிறைவு செய்த வேட்டையன் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

100 நாட்களை நிறைவு செய்த 'வேட்டையன்' படப்பிடிப்பு

தினத்தந்தி
|
29 April 2024 7:01 AM IST

'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னை,

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். லைகா புரொடக்சன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், பகத் பாசில் , ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களை கடந்துள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளதாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்