< Back
சினிமா செய்திகள்
தலைவர் - 171 : ரஜினி படத்துக்கு ராணா டைட்டில் ?
சினிமா செய்திகள்

தலைவர் - 171 : ரஜினி படத்துக்கு 'ராணா' டைட்டில் ?

தினத்தந்தி
|
21 April 2024 5:38 PM IST

தலைவர் 171 படத்தின் டைட்டில் நாளை வெளியாக உள்ளது.

ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அடுத்தபடியாக ரஜினி தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். அதே சமயம் தலைவர் 171 படம் தொடர்பான அடுத்த அடுத்த அப்டேட்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி தலைவர் 171 படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் வருகிற 22-ந்தேதி வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ''டைட்டில்' நாளை வெளியாக உள்ளது. தலைவர் - 171 படத்துக்கு 'டைட்டில்' கழுகு, ராணா, தங்கம் அல்லது கடிகாரம் என 4 பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

இப்படத்தில் ரஜினியின் மகளாக ஸ்ருதி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . 'டைட்டில்' டீசர் வெளியான பிறகு இது குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்