< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நூற்றாண்டின் சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பிடித்த ரஜினி படம்
|21 Jun 2024 4:12 PM IST
இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
ரஜினி காந்த் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'காலா'. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ஹுமா குரேசி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இந்நிலையில் இப்படம் இந்த நூற்றாண்டின் சிறந்த படத்துக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வெளியான இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 'ஓல்டு பாய்', 'கெட் அவுட்', 'ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ்', 'அனாடமி ஆப் ஹெல்' உள்ளிட்ட 25 படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படமும் ஒன்று. மேலும், இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் 'காலா' பெற்றுள்ளது