'ஜெயிலர்' : வைரலாகும் மேக்கிங் முன்னோட்ட வீடியோ
|சமீபத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்தது.
சென்னை,
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்து ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்தனர்.
சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் மேக்கிங் வீடியோவை மூன்று பாகங்களாக வெளியிட இருப்பதாக அறிவித்தது. அதன்படி, இந்த வீடியோ வரும் 16-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தின் மேக்கிங் முன்னோட்ட வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார்.