'லால் சலாம்' படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் தோற்றம் வெளியானது - வைரலாகும் போஸ்டர்
|'லால் சலாம்' படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
நடிகர் ரஜிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த படம் 2023-ம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் லால் சலாம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.