< Back
சினிமா செய்திகள்
ரஜினியின் 170-வது பட டைரக்டர்
சினிமா செய்திகள்

ரஜினியின் 170-வது பட டைரக்டர்

தினத்தந்தி
|
20 July 2022 7:53 AM IST

ரஜினியின் 170-வது படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கி கமல்ஹாசன் தயாரிக்க விரும்புவதாக தெரிகிறது.

ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். அடுத்த மாதத்தில் (ஆகஸ்டு) இருந்து தொடர்ச்சியாக ஐதராபாத் திரைப்பட நகரில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். ஜெயில் அதிகாரியாக வரும் ரஜினி சிறைக்குள் நடக்கும் தாதாக்களின் சமூக விரோத திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பது போன்று திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்து விட்டு ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது, கனா படத்தை இயக்கி பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. தற்போது லோகேஷ் கனகராஜ் பெயர் அடிபடுகிறது. இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க விரும்புவதாக தெரிகிறது. ஏற்கனவே கமல்ஹாசனும், லோகேஷ் கனகராஜும் ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். அப்போது புதிய படத்தில் இணைவது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் 4 வருட இடைவெளிக்கு பிறகு நடித்து திரைக்கு வந்த விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்