< Back
சினிமா செய்திகள்
ராமராஜனைப் பார்த்து ரஜினிகாந்த்  பயப்பட்டார்- கே.எஸ் ரவிக்குமார் பகிர்ந்த ரகசியம்
சினிமா செய்திகள்

ராமராஜனைப் பார்த்து ரஜினிகாந்த் பயப்பட்டார்- கே.எஸ் ரவிக்குமார் பகிர்ந்த ரகசியம்

தினத்தந்தி
|
30 March 2024 12:01 PM IST

ராமராஜன் நடித்துள்ள 'சாமானியன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கலந்து கொண்டார்.

சென்னை,

'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'கரகாட்டக்காரன்' உள்ளிட்ட கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் ராமராஜன். 80-களில் ராமராஜன் நடித்தப் படங்கள் எல்லாம் வெற்றி பெற்று நல்ல வசூல் குவித்தது. ராமராஜன் படங்களின் வசூலைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்தே பயப்பட்டார் என இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.

ராமராஜன் நடித்துள்ள 'சாமானியன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறியதாவது:- "ரஜினி சாரே ஒருமுறை என்னிடம் ராமராஜன் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு இருக்கும் அந்த மாஸ் ஓப்பனிங் கலெக்சனை பார்த்து நமக்கு போட்டியாக முன்னாடி போய்க் கொண்டிருக்கிறார் என பயந்துவிட்டேன் என்று கூறினார்" இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்