< Back
சினிமா செய்திகள்
Jailer Box Office அடித்து நொறுக்கும் சாதனை: இன்று 3வது நாள் ரூ.200 கோடி கிளப்பில் இணையும் ஜெயிலர்...!
சினிமா செய்திகள்

Jailer Box Office அடித்து நொறுக்கும் சாதனை: இன்று 3வது நாள் ரூ.200 கோடி கிளப்பில் இணையும் ஜெயிலர்...!

தினத்தந்தி
|
12 Aug 2023 11:13 AM IST

ஜெயிலர் படம் இரண்டாவது நாளிலும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. பல்வேறு மொழி நடிகர்களும் இணைந்திருப்பதால் தென்னிந்தியாவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

சென்னை,

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 3500-க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

இப்படத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஜாக்கி ஷெராப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயிலர் படம் இரண்டாவது நாளிலும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.பல்வேறு மொழி நடிகர்களும் இணைந்திருப்பதால் தென்னிந்தியாவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

தமிழ்நாட்டில் ஜெயிலர் ரிலீஸான முதல் நாள் ரூ.29.46 கோடியும், நேற்று ரூ.20.25 கோடியும் வசூலித்துள்ளது. கடந்த 2 நாட்களில் ஜெயிலர் தமிழகத்தில் ரூ.49.71 கோடிகளை வசூலித்துள்ளது.

தமிழகத்தில் 2023-ம் ஆண்டில் வெளியான படங்களில் வசூல் சாதனையில் 'ஜெயிலர்' படம் முன்னணியில் இருப்பதாக வர்த்தக ஆய்வாளர் மனோபாலா டுவீட் செய்து உள்ளார்.

கேரளாவில் விஜய் நடித்த வாரிசு படத்தின் வசூலை முந்தி ரஜினியின் 'ஜெயிலர்' படம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக ஆய்வாளர் மனோபாலா தகவல்படி உலகம் முழுவதும் ஜெயிலர் படம் முதல் நாள் ரூ.95.78 கோடியும், 2 வது நாள் ரூ.56.24 கோடியும் வசூல் செய்து உள்ளது. மொத்தம் ரூ.152.02 கோடி வசூல் செய்து உள்ளது. இன்று 3 வது நாள் ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணையும் என கூறி உள்ளார்.

சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், வசூல் அதிகரிக்க கூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள்.

மேலும் செய்திகள்