< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' படத்தின் புதிய அப்டேட்..!
|1 Oct 2023 8:19 PM IST
'தலைவர் 170' படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு 'தலைவர் 170' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார். இந்த படத்தின் படக்குழு குறித்த விவரம் இன்று முதல் அறிவிக்கப்படும் என்று லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் நேற்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது 'தலைவர் 170' படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும், "அனிருத் இணைவதால் தலைவர் 170 படக்குழுவின் உற்சாகம் பன்மடங்கு ஆகும்" என்று லைகா புரொடக்சன்ஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.