< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு: படக்குழுவினர் கொண்டாட்டம்
|1 Jun 2023 7:30 PM IST
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்து உள்ளது.
சென்னை,
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்து உள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.