< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ரஜினிகாந்துடன் 'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள்
|2 Sept 2022 4:27 PM IST
ரஜினிகாந்த் தற்போது, ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. அந்தப் படத்தில் அவருடன் நடிக்கும் நடிகர்-நடிகைகளின் பட்டியலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தப் படத்தில் ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. வடசென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் அடுத்தகட்ட படப் பிடிப்பு நடைபெற இருக்கிறது. நெல்சன் டைரக்டு செய் கிறார்.
இந்தப் படத்தில் ரம்யாகிருஷ்ணன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினிகாந்தின் 'படையப்பா' படத்தில், ரம்யாகிருஷ்ணன் வில்லியாக நடித்தார். அதன்பிறகு, 'பாபா' படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்தார். 'ஜெயிலர்' படத்தில், ரம்யாகிருஷ்ணனுக்கு என்ன வேடம்? என்று அறிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.