< Back
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்ப வேண்டும் - சத்யராஜ்
சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்ப வேண்டும் - சத்யராஜ்

தினத்தந்தி
|
2 Oct 2024 7:01 PM IST

ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டார். இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதனால் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென திரை, அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் சத்யராஜ் தெரிவித்து இருப்பதாவது:

"சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி சார் அவர்கள் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். மீண்டும் பணிகளில் பங்கேற்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்