< Back
சினிமா செய்திகள்
சசிகலாவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
சினிமா செய்திகள்

சசிகலாவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

தினத்தந்தி
|
25 Feb 2024 1:15 AM IST

சசிகலாவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

சென்னை,

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப்பிரவேசம் நடைபெற்றது.

இந்நிலையில், சசிகலாவை அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்தார். சசிகலா புதிதாக கட்டியுள்ள இந்த வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதையடுத்து, ஜெயலலிதாவின் இடத்தை யார் நிரப்புவார் என ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், அரசியல் பேச விரும்பவில்லை' என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்