< Back
சினிமா செய்திகள்
ரஜினி படம் ரிலீஸ் தள்ளி வைப்பு?
சினிமா செய்திகள்

ரஜினி படம் ரிலீஸ் தள்ளி வைப்பு?

தினத்தந்தி
|
24 Jan 2023 7:29 AM IST

ஜெயிலர் படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் உள்ளனர். தமன்னா சமீபத்தில் படப்பிடிப்பில் இணைந்தார்.

ஜெயிலர் படத்தின் டீசரை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டனர். அதில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது. ஜெயிலர் படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் தற்போது ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தள்ளிவைப்புக்கு காரணம் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் என்று கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை ஏப்ரல் 28-ந்தேதி திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

அந்த படத்தோடு மோதலை தவிர்க்கவே ஜெயிலர் படத்தை தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.

மேலும் செய்திகள்