< Back
சினிமா செய்திகள்
சந்திரமுகி-2 படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
சினிமா செய்திகள்

'சந்திரமுகி-2' படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

தினத்தந்தி
|
29 Sept 2023 8:45 PM IST

‘சந்திரமுகி-2’ படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை,

ரஜினி, ஜோதிகா நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'சந்திரமுகி'. இப்படத்தில் திகில், காமெடி, பாடல்கள், மாஸ், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்று எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்திப்படுத்தியது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக நேற்று வெளியாகியுள்ளது 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அதில் தன்னுடைய மிகப்பெரிய வெற்றி படமான சந்திரமுகியை புதிய கோணத்தில், பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் வாசுவுக்கும், அருமையாக நடித்திருக்கும் ராகவா லாரன்சுக்கும் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்