< Back
சினிமா செய்திகள்
ரஜினி படத்தின் புதிய அப்டேட்...
சினிமா செய்திகள்

ரஜினி படத்தின் புதிய அப்டேட்...

தினத்தந்தி
|
27 Feb 2024 8:47 PM IST

ரஜினி நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது

சென்னை,

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்