< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ரஜினியின் ஜெயிலரால் தள்ளிப்போகும் படங்கள்
|6 May 2023 6:30 AM IST
ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தை ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர். இதனால் ஆகஸ்டு 11-ந் தேதி வெளியாக இருந்த சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் ரிலீசை தள்ளி வைக்கலாமா அல்லது முன்கூட்டி ஜூலை மாதம் வெளியிடலாமா என்று படக்குழுவினர் யோசித்து வருகிறார்கள். வேறு சில படங்களும் ஜெயிலருடன் மோத விரும்பாமல் ரிலீசை தள்ளி வைத்துள்ளன.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகி உள்ள 'ஜவான்' படத்தை ஜெயிலர் வெளியாகும் அதே நாளில் திரைக்கு கொண்டுவர முடிவு செய்து இருந்தனர். ஆனால் 'ஜெயிலர்' படத்துடன் மோத விரும்பாமல் 'ஜவான்' படத்தையும் தள்ளிவைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.