< Back
சினிமா செய்திகள்
170-வது படத்துக்கு தயாராகும் ரஜினி...!
சினிமா செய்திகள்

170-வது படத்துக்கு தயாராகும் ரஜினி...!

தினத்தந்தி
|
18 Aug 2023 8:03 AM IST

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் சர்வானந்திடம் பேசி வருகிறார்கள்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் திரைக்கு வந்து உலக அளவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இமயமலை சென்று கோவில்களில் வழிபாடு செய்து வந்த ரஜினிகாந்த் ஆன்மிக பயணத்தை முடித்து விட்டு தனது 170-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் டைரக்டு செய்கிறார்.

இதில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும், போலி என்கவுண்ட்டர் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் சர்வானந்திடம் பேசி வருகிறார்கள்.

ஏற்கனவே மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. லால்சலாம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்