'ரஜினி, அஜித்திடம் உள்ள பொதுவான குணங்கள்' - பகிர்ந்த மஞ்சு வாரியர்
|அஜித்துடன் துணிவு படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.
சென்னை,
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான மஞ்சுவாரியர் மோகன்லாலுடன் லூசிபர், மம்முட்டியுடன் தி பிரீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அஜித்துடன் துணிவு படத்தில் நடித்திருந்தார்.
தற்போது விடுதலை 2, ரஜினியுடன் 'வேட்டையன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், அடுத்த மாதம் 10-ம் தேதி வேட்டையன் படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் அமிதாப்பச்சன், பகத்பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான 'மனசிலாயோ' பாடலில் மஞ்சு வாரியரின் தோற்றம் மற்றும் நடனம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில், மோகன்லால், மம்முட்டி, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் மற்றும் அஜித்திடம் உள்ள பொதுவான குணங்கள் குறித்து மஞ்சுவாரியர் பகிர்ந்துள்ளார்.
நான்கு பேருடனும் பணிபுரிந்துள்ள மஞ்சு வாரியர், அவர்கள் பெரிய நட்சத்திரங்களாக இருந்தபோதிலும் நம்பமுடியாத அளவிற்கு அடக்கமாக இருப்பதாகவும் இது அவர்களிடமிருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்றும் கூறினார்.