< Back
சினிமா செய்திகள்
ஜெயில் கைதிகள் கதைக்களத்தில் ரஜினி படம்
சினிமா செய்திகள்

ஜெயில் கைதிகள் கதைக்களத்தில் ரஜினி படம்

தினத்தந்தி
|
14 Jun 2022 3:22 PM IST

ரஜினியின் 169-வது படம் ஜெயில் மற்றும் ஜெயில் கைதிகளை பற்றிய கதையம்சம் உள்ள படமாக தயாராவதாகவும், படத்துக்கு ஜெயிலர் என்ற பெயரை வைக்க பரிசீலிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் 169-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அடுத்த மாதம் (ஜூலை) படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதை கன்னட நடிகர் சிவராஜ்குமார் சமீபத்தில் உறுதிப்படுத்தினார். அவர் கூறும்போது, "ரஜினியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினியுடன் நடிப்பதை அனைவருமே சிறந்த வாய்ப்பாக கருதுவார்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ரஜினியும், நானும் திரையில் ஒன்றாக தோன்றுவதை ரசிகர்களும் விரும்புவார்கள்'' என்றார். படத்தில் சிவராஜ் குமார் வில்லனாக நடிப்பார் என்று தெரிகிறது.

கதாநாயகியாக ஐஸ்வர்யா ராயும் இதர கதாபாத்திரங்களில் ரம்யாகிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன் ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் 169-வது படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் சமூக வலைத்தளத்தில் கசிந்து தீயாய் பரவி வருகிறது. ஜெயில் மற்றும் ஜெயில் கைதிகளை பற்றிய கதையம்சம் உள்ள படமாக இது தயாராவதாகவும் படத்துக்கு ஜெயிலர் என்ற பெயரை வைக்க பரிசீலிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் செய்திகள்