சர்ச்சையில் ரகுல்பிரீத் சிங்
|தென்னிந்திய திரையுலகை ரகுல்பிரீத் சிங் ஏளனமாக பேசியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுக்குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரகுல்பிரீத் சிங்குக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை. இதனால் இந்திக்கு போய் உள்ளார். அங்கு சில படங்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் தென்னிந்திய திரையுலகை ரகுல்பிரீத் சிங் ஏளனமாக பேசியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவர் அளித்த பேட்டியில், ''இந்தி சினிமாவை தென்னிந்திய சினிமா கொன்றுவிட்டது என்றும், இந்தி சினிமா கதை முடிந்துவிட்டது என்றும், இனி யாராலும் அதை தூக்கி நிறுத்த முடியாது என்றும் சிலர் பேசுவதை நான் ஏற்க மாட்டேன். எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் அதில் நடிக்கும் நடிகர்-நடிகைகள், கதை, தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பை பொறுத்தே வெற்றி பெறும்" என்றார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவை இழிவுபடுத்தி விட்டதாக வலைத்தளங்களில் கண்டனங்கள் கிளம்பி வந்தன. இதற்கு ரகுல் பிரீத் சிங் 'ஒருநாள் அனைத்து மொழி சினிமா துறையும் ஒன்றாக இணைந்துவிடும். அதற்குள் இதுபோன்ற வெட்டி பேச்சுக்கள் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.