< Back
சினிமா செய்திகள்
திருமண வதந்திகளுக்கு ரகுல்பிரீத் சிங் விளக்கம்
சினிமா செய்திகள்

திருமண வதந்திகளுக்கு ரகுல்பிரீத் சிங் விளக்கம்

தினத்தந்தி
|
26 Feb 2023 6:56 AM IST

தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மூலம் பிரபலமாகி முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங், தனது திருமணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "எனது திருமணம் குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. எனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் பேசுகிறார்கள். எப்போது திருமணம் நடந்தது என்று யாரேனும் சொல்ல முடியுமா? ஒவ்வொரு வாரமும் என்னைப்பற்றி புதிது புதிதாக தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கூகுள் அலர்ட்ஸ் மூலம் அவை எனக்கு வந்து சேருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பரில் என் திருமணம் நடந்து விட்டதாக தகவல் பரப்பினார்கள். அது எப்படி நடந்தது என்று அவர்களையே கேட்கவேண்டும் என நினைக்கிறேன். எதுவும் உண்மை இல்லை" என்றார். இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக ரகுல் பிரீத் சிங் கடந்த 2021-ல் அறிவித்தார். அப்போது இருந்தே இவர்கள் திருமணம் குறித்த தகவல் வலைத்தளத்தில் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் படங்கள் ரகுல் பிரீத் சிங் கைவசம் உள்ளன.

மேலும் செய்திகள்