ராகவா லாரன்சின் அடுத்த படம் - புகைப்படம் வைரல்
|ராகவா லாரன்சின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' . இப்படத்தில் லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் நடித்திருப்பர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 2 -வது படமாகும்.
அதனையடுத்து ராகவா லாரன்சின் 25-வது திரைப்படமாக 'ஹண்டர்' படத்தில் நடிக்கவுள்ளார். ஹண்டர் படத்தை வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
தற்போது ராகவா லாரன்சின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் 'அதிகாரம்' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணி முன்னதாக பாதியிலேயே நின்றது. இப்பொழுது மீண்டும் எடுக்கவுள்ளனர். கதிரேசன் மற்றும் வெற்றிமாறன் இப்படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
இது குறித்தான புகைப்படத்தை ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனுடன் பகிர்ந்த பதிவில்,
வெற்றிமாறன்சார் எழுதியுள்ள படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் முன்பு அறிவித்த 2 படங்களையும் முடித்துவிட்டு இப்படத்தில் இணைவேன். வெற்றிமாறன்சாருக்கு நன்றி. தயாரிப்பாளர் கதிரேசன் சாருக்கு நன்றி. உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.