அம்மாவிற்காக விஜய் கட்டிய சாய் பாபா கோவில்: பார்வையிட்ட ராகவா லாரன்ஸ் - வீடியோ வைரல்
|கோவிலை கட்டியதற்காக நண்பன் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று ராகவா லாரன்ஸ் கூறினார்.
சென்னை,
நடிகர் விஜய் தன் அம்மாவின் விருப்பத்திற்காக சென்னையில் சாய்பாபா கோவிலை கட்டியுள்ளார். இது குறித்தான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த கோவிலுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். இது குறித்தான வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில்,
அனைவருக்கும் வணக்கம், இன்று நண்பன் விஜய்யின் சாய்பாபா கோவிலுக்கு அவரது தாயாருடன் சென்றேன். நான் ராகவேந்திர சுவாமி கோவிலை கட்டியபோது, அங்கு வந்து ஒரு பாடலை பாடினார். இன்று அவருடன் அவர்கள் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கோவிலை கட்டியதற்காக நண்பன் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நான் தூய்மையான தெய்வீக மற்றும் இனிமையான அதிர்வுகளை அங்கு உணர்ந்தேன். அனைவரும் கோவிலுக்கு வந்து சாய்பாபாவின் அருள் பெறுமாறு விரும்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.