< Back
சினிமா செய்திகள்
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படம் டிச.23-ம் தேதி வெளியாகும்..!
சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' திரைப்படம் டிச.23-ம் தேதி வெளியாகும்..!

தினத்தந்தி
|
3 July 2022 5:55 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' திரைப்படம் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை, பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்சன் வகை திரைப்படமாக உருவாகியுள்ள 'ருத்ரன்' படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. கையில் ஆயுதத்துடன் ஒருவரை அடித்து ஆக்ரோஷமான பார்வையுடன் பிரம்மாண்டமான ராட்டினத்திற்கு முன்னால் நிற்பது போன்ற பர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு கிறிஸ்மசை ஒட்டி 'ருத்ரன்' திரைப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' திரைப்படம் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் ருதரன் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் மதுபான பாட்டிலுடன் ஆக்ரோஷமான பார்வையுடன் ஷோபாவில் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்