தம்பிக்கு கார் பரிசளித்த ராகவா லாரன்ஸ் - எதற்காக தெரியுமா?
|எல்வின் தற்போது 'புல்லட்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரது சகோதரர் எல்வின். இவர் தற்போது 'புல்லட்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தை இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்குகிறார்.
இப்படத்தில் ராகவா லாரன்சும் நடித்துள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் தனது சகோதரரின் நடிப்பை பாராட்டும் விதமாக காரை பரிசாக வழங்கியுள்ளார்.
இது குறித்து ராகவா தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில், இந்த அருமையான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனது சகோதரர் எல்வினின் முதல் திரைப்படமான புல்லட்டைப் பார்த்தேன், அவருடைய நடிப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இது அவருக்கான எனது பரிசு மற்றும் அவரது நடிப்பால் என்னை பெருமைப்படுத்தியதற்காக ஒரு சிறப்பு முத்தம். ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள். என் சகோதரனுக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.