இல்லறத்துக்கு ஆபத்தானவர்கள்.... எச்சரிக்கும் ராதிகா ஆப்தே
|தம்பதி மற்றும் காதல் ஜோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக நடிகை ராதிகா ஆப்தே பேட்டி அளித்துள்ளார்.
தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தம்பதி மற்றும் காதல் ஜோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ''நானும் எனது கணவர் பெனடிக்ட்டும் அவரவர்களுக்கு பிடித்த மாதிரி இருந்து கொண்டே அவரவர் உலகத்தில் சுதந்திரமாக அற்புதமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் கணவன் மனைவி அல்லது காதலன் காதலி இருவர் இடையே ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டால் மூன்றாம் மனிதரின் ஆலோசனையை பெறக்கூடாது. அது காதல் மற்றும் இல்லற வாழ்க்கைக்கு மிகவும் ஆபத்தானது. மூன்றாம் மனிதர் ஒருவரை நாம் எப்போது வரவேற்கிறோமோ அப்போதே உங்கள் உறவில் விரிசல் ஆரம்பமாகிவிட்டது என சொல்லலாம். நமது கணவர் அல்லது காதலரை நம்மை விட யாரும் நன்றாக புரிந்து இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது நமது வாழ்க்கையில் நமது பிரச்சினையை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதில் மூன்றாம் மனிதரின் பிரவேசம் நடக்கும்போது நிச்சயம் அந்த உறவு மெல்ல மெல்ல பிரிவை நோக்கி தான் செல்லும்'' என்றார்.