< Back
சினிமா செய்திகள்
மார்பகங்கள் சிறியதாக இருப்பதால் பட வாய்ப்புகளை இழந்ததாக பிரபல நடிகை வேதனை
சினிமா செய்திகள்

மார்பகங்கள் சிறியதாக இருப்பதால் பட வாய்ப்புகளை இழந்ததாக பிரபல நடிகை வேதனை

தினத்தந்தி
|
14 Jun 2022 12:42 PM IST

சிறிய மார்பகங்களால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்ததாக பிரபல நடிகை வேதனை பட்டுள்ளார்.

மும்பை

தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் நடிகை ராதிகா ஆப்தே. அடிக்கடி அவரது நிர்வாண படங்கள் கசிந்து பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் வேதனையுடன் பேசி உள்ளார் ராதிகா ஆப்தே.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் சந்தித்த முதல் சந்திப்பில், என் மூக்கை மாற்றச் சொன்னார்கள். நான் ஒல்லியாக இருப்பதால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். ஒப்பந்தமான படங்களில் இருந்து தான் நீக்கப்படுவது குறித்து கேட்டால், உங்களுக்கு மார்பகம் பெரிதாக இல்லை, நீங்கள் பார்ப்பதற்கு செக்சியாக இல்லை என்று கூறுவார்கள்.

உங்களுக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து விட்டோம் என்று தெரிவிப்பார்கள்.

தலைமுடியை கூட மாற்ற சொல்வார்கள் , கலரிங் செய்ய சொல்வார்கள் என்றும் தெரிவித்துள்ள ராதிகா ஆப்தே அதன் பிறகு தான் தன் உடலை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பித்ததாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்