சக நடிகர்கள் மீது ராதாரவி வருத்தம்
|நடிகர் டேனியின் நடிப்பு பயிற்சி நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு சக நடிகர்கள் சிலர் மீது வருத்தம் தெரிவித்தார்.
ராதாரவி பேசும்போது, "நான் 49 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். 400 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். இப்போதெல்லாம் நன்றாக நடித்தால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
கூட இருக்கும் சக நடிகர்களே, இவன் முகம் மக்களிடம் பரிச்சயம் ஆகிவிடக்கூடாது இவனை எப்படிடா வெட்டுவது என்றுதான் யோசிப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் கடவுள் பட வாய்ப்பை கொடுக்கிறான்,
நான் மனதில் பட்டதை பேசி விடுவேன். என்னை பிடிக்காதவர்கள் நான் நடிக்கும் படங்களைப் பார்க்காமல் தவிர்த்து விடுங்கள். ஹீரோவைச் சார்ந்து எடுக்கப்படும் படங்களில் நான் இருக்கிறேன். என்னை உதாசீனம் செய்தால் உங்கள் ஹீரோக்களை உதாசீனப்படுத்த வேண்டும்.
இந்த காலத்தில் எல்லாரும் தாடி வைத்துள்ளார்கள், நடிகர்களுக்கு தாடி வைப்பது ஒத்துப்போகும். ஏனென்றால் அவர்கள் என்ன நடிக்கிறார்கள் என்று கிளாரிட்டியாக தெரியாது. அதனால் தாடி வைத்துள்ளார்கள்.
தயவுசெய்து இளைஞர்கள் தாய் தந்தையர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள். கடைசிவரை வைத்து காப்பாற்றுங்கள். அவர்கள் ஆசிர்வாதம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்'' என்றார்.