ஹனிரோஸ் கவர்ச்சி கசாப்புக்கடைக்காரியாக நடிக்கும் "ரேச்சல்"
|ஹனிரோஸ் கசாப்புக்கடைக்காரியாக நடித்து உள்ளார் என டைட்டில் போஸ்டர் கூறுகிறது. இது ஹனிரோசுக்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக இருக்கும்
திருவனந்தபுரம்
நடிகை ஹனிரோஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டைரக்டர் அப்ரிட் ஷைன் வெளியிட்டுள்ளார். படத்தின் பெயர் 'ரேச்சல்'. இப்படத்தில்ஹனிரோஸ் கசாப்புக்கடைக்காரியாக நடித்து உள்ளார் என டைட்டில் போஸ்டர் கூறுகிறது. இது ஹனிரோசுக்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக இருக்கும்.
பாதுஷா புரொடக்ஷன்ஸ் மற்றும் பென் அண்ட் பேப்பர் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் படத்தை தயாரிக்கின்றன.
ரேச்சல் படத்தை அறிமுக டைரக்டர் ஆனந்தினி பாலா இயக்குகிறார். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை ராகுல் மணப்பாட் மற்றும் அப்ரிட் ஷைன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படம் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்படுவதால் இப்படம் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.
படத்தின் நடிகர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்த அறிவிப்பு போஸ்டர் ஹனி ரோஸின் இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியாகி உள்ளது.