< Back
சினிமா செய்திகள்
Raayan: OTT release date announced
சினிமா செய்திகள்

'ராயன்': ஓ.டி.டியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
16 Aug 2024 1:49 PM IST

'ராயன்' படம் ஓ.டி.டியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

செனை,

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் கடந்த மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

'ஏ' சான்றிதழுடன் திரைக்கு வந்து முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமையைப் இப்படம் பெற்றுள்ளது. இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் ராயன் திரைப்படம்தான் அதிகம். மேலும், இப்படமானது உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 23-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்